தற்போது விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் தமன்னா, இந்த படத்தில் ஒரு ஆச்சாரமான பிராமண் பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கிறார்.சாதாரணமாக வடசென்னை கதைக்களம் என்றால், அந்த படத்தில் நடித்திருப்பவர்களை கருப்பு கலர், எண்ணெய் தேய்க்காத பரட்டை தலை என்று மாற்றி விடுவார்கள். ஆனால், இந்த படத்தில் சில காட்சிகளில் அப்படி தோன்றும் விக்ரம், பின்னர் தனது லுக்கை மாற்றிக்கொள்கிறாராம். அதேபோல், பிராமண பெண்ணாக நடிக்கும் தமன்னா, சில காட்சிகளில் மடிசார் சேலை அணிந்தும் ஹை லுக்கில் தோன்றுகிறாராம். அது தமன்னாவுக்கு புதிய அவுட்லுக்கை கொடுத்திருக்கிறதாம். அதோடு, இந்த தாதா கதையில் தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.படத்தில் ட்விஸ்ட் மற்றும் அதிரடி காட்சிகள் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அதிகம் உள்ளதாம். ரோகேஷ் எழுதிய தரலோக்கள் குத்து பாடல் விக்ரமுக்கு இன்ட்ரோ பாடல்.இந்தப்பாடல் திரையரங்குகளில் பட்டயகெளப்பும் பாடலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பாடலை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது......
ஸ்கெட்ச் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் ட்விஸ்ட் மற்றும் அதிரடி காட்சிகள் !!!
Labels:
தமிழ் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment