இருமுகன் படத்தை அடுத்து ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், சாமி-2 என மூன்ற படஙக்ளில் ஒப்பந்தமான விக்ரம், வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பைக் திருடன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெமினி படத்தில் தோன்றிய தாடி கெட்டப்பில் நடித்துள்ள விக்ரம், வடசென்னை தமிழ் பேசியும் நடித்து வருகிறார்.மேலும், இந்த படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் தமன்னா, சூரி, ஸ்ரீபிரியங்கா முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் தொடங்கப்பட்டு பின்னர் பாண்டிச்சேரியில் நடந்து வந்தது. தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதம் 15-ந்தேதியோடு ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறதாம். சமீபத்தில் இப்படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை எடிட் செய்து பார்த்த விக்ரம், தான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக இருப்பதாக மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஸ்கெட்ச் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக இருப்பதாக மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் !!! விக்ரம்.
Labels:
தமிழ் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment