தற்பொழுதைய தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் விக்ரம், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட விருக்கும் சீயானுக்கு அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக துருவநட்சத்திரம் படக்குழுவினர்
அத்திரைப்படத்தின் மற்றொரு டீஸரை ஏப்ரல் 16 அன்று வெளியிட்டுள்ளனர். முன்னதாக வெளியான டீஸரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்த டீஸரின் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் விதம் அமைந்துள்ளது.
விமானத்தில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறும் வரையிலான சிறிது நேரம் மட்டுமே உள்ள இந்த டீஸரின் ஒவ்வொரு கட்டும் அவ்வளவு அருமையாக காட்சிபடத்தப்பட்டுள்ளது.கபாலியை மிஞ்சும் வகையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விக்ரம் நடந்து வரும் காட்சியின் பின்னணி இசை ஹாலிவுட் படத்தின் காட்சியை பார்த்த உணர்வினை கொடுக்கின்றது.டீஸரை வெளியிட்ட 14 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.என்னடா இந்த மனுஷன் எந்த கேரக்டர் குடுத்தாலும் பட்டய கெளப்புறானே என்று என்ன தோன்றவைக்கின்றது விக்ரமின் எதார்த்த நடிப்பு.
No comments:
Post a Comment