விக்ரம் படத்தில் தமன்னா சிங்கிள் நாயகியாக நடித்திருக்கிறார். அதுவும் கவர்ச்சி நாயகியான அவர் இந்த படத்தில் ஹோம்லியான ரோலில் நடித்துள்ளார்.மேலும், பைக் திருடனான விக்ரமின் காதலியாக நடித்திருக்கும் அவர், இதுவரை அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வந்தார். அந்த காட்சிகள் அனைத்துமே பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வந்தது. அடுத்தப்படியாக டூயட் பாடலுக்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் செட் போட்டனர். ஆனால் இப்போது அந்த செட்டில் விக்ரம், தரலோக்கள் குத்துப்பாடலுக்கு ஆடிப்பாடும் ஒரு பாடலை படமாக்கப்போகிறார்களாம். அதனால், விக்ரம்-தமன்னாவின் டூயட் பாடலை வெளிநாடு சென்று படமாக்க திட்டமிட்டுள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment