'ஸ்கெட்ச்' படத்தில் பைக் திருடனாக வாழ்ந்து காட்டியுள்ளாராம் விக்ரம்!!!


விக்ரமும், தமன்னாவும், முதன்முறையாக ஜோடி சேரும் படம் என்பதால், ஸ்கெட்சுக்கு, கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில், பைக் திருடனாக நடித்து உள்ளாராம், விக்ரம். 'பைக்கை திருடுவது எப்படி' என்பதில், ஸ்கெட்ச் போடும் கில்லாடி திருடனாக இதில் வாழ்ந்து காட்டியுள்ளாராம். இந்த படத்துக்காக, சொந்த குரலில், ஒரு பாடலும் பாடியுள்ளாராம், விக்ரம். பாகுபலி - 2 படத்தில், கடைசி காட்சியில், ஒரு துணை நடிகையை போல், தன்னை காட்டியதை, இன்னும் ஜீரணிக்க முடியாமல், கடுப்பில் இருக்கும் தமன்னாவின் ஏக்கத்தை, இந்த படம் போக்கும் என்கிறது படக்குழு. அதற்கேற்ப, பாடல் காட்சிகளில், தாராளம் காட்டியுள்ளாராம் தமன்னா.இந்த ஜோடி, வெற்றி பெரும் என்று கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Share

No comments:

Post a Comment

 
Copyright © 2016. CFE.
Design by Herdiansyah Hamzah. Published by Premium Themes. Powered by Blogger.
Creative Commons License