இயக்குனர் ஹரியின் படங்களை பொறுத்தவரை பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீபிரசாத், யுவன் சங்கர் ராஜா என பலரும் மாறி மாறி இசையமைத்து வருகிறார்கள்… தன்னுடைய வேகத்திற்கு ஈடுகொடுப்பதாலும், எல்லோருடனும் பணியாற்ற விரும்புவதாலும் தனது படம் உருவாகும் சமயத்தில் யார் ப்ரீயாக இருக்கிறார்களோ அவர்களை தன்னுடன் இணைத்துக்கொள்வார் ஹரி. இந்த நிலையில் சாமி 2 படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளாராம். இந்த தகவலை அப்பட தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.
அந்தவகையில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் சாமி-2 படத்துக்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார். அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தது. அதேபோல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.
புலி, இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது.
No comments:
Post a Comment