‘வாலு’ புகழ் இயக்குநர் விஜய் சந்தரின் இயக்கத்தில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. ‘சியான்’ விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், ஆர்.கே.சுரேஷ், ‘கங்காரு’ புகழ் ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேஷன்ஸ்’ மூலம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
படத்தின் ஸ்டைலிஷ் போஸ்டர்ஸ் மற்றும் மாஸ் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்டு ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சியான்’ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக விக்ரமே பாடிய ‘கனவே கனவே’ எனும் சிங்கிள் ட்ராக்கை ட்விட்டியுள்ளது படக்குழு. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது.
No comments:
Post a Comment