சியான் விக்ரம் தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் ஆகிய திரைபடத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் விக்ரம் தனது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதேவேளையில் ஸ்கெட்ச் படப்பிடிப்பு தளத்தில் வெகு விமர்சையாகவும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தினை பற்றி புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது, சியான் விக்ரமுக்கு இப்படத்தில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல.ராமமூர்த்தி நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
இந்த தகவலை வேல.ராமமூர்த்தியும் தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரே உறுதி செய்துள்ளார்.மதயானைக்கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், கிடாரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள எழுத்தாளர் வேல ராமமூர்த்தி தற்போது ஸ்கெட்ச், எனை நோக்கி பாயும் தோட்டா, அறன், எய்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்கெட்ச் திரைப்படத்தில் நடிக்கு அனுபவத்தை பற்றி கூறியுள்ள வேல.ராமமூர்த்தி, “இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன், விக்ரம் ஒரு பன்பட்ட கலைஞர், மிகவும் எழிமையானவர், முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு நான் சென்றவுடன் நான் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து என்னை சந்தித்து பேசினார், அவ்வளவு பெரிய மகா கலைஞன் என்னை வந்து சந்தித்து சகஜமாக பேசுகிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன் ” என்று கூறியுள்ளார்.
வேல.ராமமூர்த்தி தன் நடிப்பின் மூலம் மட்டுமின்றி தன்னுடைய எழுத்துக்களாலும் விக்ரமை கவர்ந்திழுத்துள்ளார், இதை பற்றி அவர் கூறுகையில், “ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் நானும் விக்ரமும் உட்கார்ந்த்து பேசிக்கொண்டிருதோம் அப்போது என்னுடைய புத்தகங்களை பற்றி வெகு நேரமாக பேசிக்கொண்டிருந்தார் என் எழுத்துக்களை பற்றி அவரின் கருத்துகளையும் என்னிடம் தெரிவித்தார், அதில் அவர் கூறிய முக்கிய விஷயம்” ‘உங்களுடைய எழுத்துக்களில் ஒரு வகையான கோபம் தெரிகிறது, நம்முடைய ஊரைப்பற்றி கூறியதாலோ என்னவோ (விக்ரமின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி) உங்களின் கதையோடு ஒன்றிப்போய்விட்டேன்’ என்றும் ’எல்லோருக்கும் இந்த உலகில் தங்களுடைய தாய் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் இல்லை ஆனால் எனக்கு இப்படத்தில் எனக்கு என் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது, அந்த கோபக்கார எழுத்தாளர் தான் எனது தந்தையாக வரவேண்டும்’ என்று விக்ரம் படக்குழுவிடம் கூறியதாக அவரிடம் கூற பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் வேல.ராமமூர்த்தி.
No comments:
Post a Comment