துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தைப்பொறுத்தவரை விக்ரம் நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் படம் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். அந்த படத்தில் எனக்கு எந்தமாதிரியான கதாபாத்திரம் என்பதை இன்னும் டைரக்டர் சொல்லவில்லை. கெளதம்மேனனைப் பொறுத்த வரை ஸ்பாட்டிற்கு போன பிறகுதான் எந்தமாதிரியான ரோல் என்பதை சொல்வார் என்று சில நடிகைகள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அதைப்பற்றி நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரித்துவர்மாவும் இருக்கிறார். எங்களில் விக்ரமிற்கு ஜோடியாக வருவது அவரா இல்லை நானா என்பதும் எனக்கு தெரியாது. அதோடு, நான் எப்போதுமே பர்பாமென்ஸ் கேரக்டர்களில் நடிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறேன். அதனால் ஹீரோவுடன் டூயட் பாடும் வேடம்தான் வேண்டும் என்று டைரக்டர்களிடம் சொல்வதில்லை. அதனால் ஒருவேளை விக்ரமிற்கு ஜோடி நானில்லை என்றாலும் நான் பீல் பண்ண மாட்டேன். அதேசமயம், கண்டிப்பாக கெளதம்மேனன் எனக்கு நல்ல அழுத்தமான கேரக்டர் வைத்திருப்பார் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
No comments:
Post a Comment