எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் துணிச்சலாக நடித்து வருபவர் பிருத்விராஜ். குறிப்பாக, தமிழில் அறிமுகமான கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமான பிருத்விராஜ் அதன்பிறகு ஹீரோவாகி விட்டபோதும், கடைசியாக சித்தார்த்துடன் இணைந்து நடித்த காவியத்தலைவன் படத்திலும் வில்லன் வேடத்திலேயே நடித்திருந்தார்.அதன்பிறகு இந்தியில் நான் சபானா என்ற படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார் பிருத்விராஜ். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காத அவர், தற்போது கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் பிருத்விராஜ். இதற்கு முன்பு அவர் தமிழில் நடித்த வில்லன் வேடங்களை விட அதிரடியான ஸ்டைலிசான கெட்டப்பில் இந்த படத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிருத்விராஜ், ராவணன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment